சென்னை: மத்திய பட்ஜெட் - பிப். 8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்

68பார்த்தது
சென்னை: மத்திய பட்ஜெட் - பிப். 8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்
பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசுக்கு எதிராக பிப். 8-ல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழகத்தின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழக முதல்வரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பின்பும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மைக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை மாலை தமிழகம் முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி