கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் நடத்தி வரும் மளிகைக் கடைக்கு அருகில் வசிக்கும் ரோஷன்(20) என்பவர், அடிக்கடி பெண்ணிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 24ம் தேதி, பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது ரோஷன் எச்சில் துப்பியதால் ஏற்பட்ட வாய்த்தகராறில், அப்பெண்ணை தாக்கி, தடுக்க வந்த அவரது தாயையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் ரோஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.