செல்லிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தருண்குமார் (28) என்பவர், கோயம்பேட்டில் தங்கி உணவு டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். மே 15ம் தேதி நள்ளிரவில், டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த குப்பை லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.