
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்.. 13,133 பயனாளிகளுக்கு சிகிச்சை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் 8-வது முகாமில் 13,133 பேர் பயனடைந்தனர். அனந்தநாடார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கினர். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் எக்கோ போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டன.




