சென்னையில் உள்ள நடிகர்கள் அஜித், எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் சோதனை நடத்தியதில், இந்த மிரட்டல் ஒரு புரளி எனத் தெரியவந்துள்ளது.