சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மர்ம மெயில் ஒன்றில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீடான சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இது ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு விடுக்கப்பட்ட இரண்டாவது மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.