தபால் அலுவலகத்தில் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

168பார்த்தது
தபால் அலுவலகத்தில் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
மாடம்பாக்கம், ரமணா நகரில் உள்ள தபால் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, எட்டு மொபைல் போன்கள் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை ஊழியர்கள் வந்து பார்த்தபோது இந்த திருட்டு தெரியவந்தது. லாக்கர் உடைக்கப்படாததால் பணம் தப்பியது. இது குறித்து சேலையூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி