சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருபவர் ஹரி. இவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தலைமுடியைப் பிடித்து குழாயால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் காவலர் ஹரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.