இலங்கையை சேர்ந்த சீரியல் நடிகை சுபாஷினி போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 6ம் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து பதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர் மற்றும் பாஸ்போர்ட்டில் பெயர் வேறுபாடு உள்ளதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை தூதரகத்திடம் அனுமதி கடிதம் கேட்டுள்ளனர். பின்னரே உடலை எடுத்து செல்லமுடியும் என கூறப்படுகிறது.