சென்னை: விமான டிக்கெட் இருமடங்கு உயர்வு

63பார்த்தது
சென்னை: விமான டிக்கெட் இருமடங்கு உயர்வு
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், கோடை விடுமுறையில் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று இருந்தவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வருபவர்களுக்கு ரயில்கள், பேருந்துகளில் இடம் கிடைக்காத காரணத்தால், கடைசி நேரத்தில் விமானங்களில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். 

இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளான மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை ஆகிய மாநகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி நகரங்களில் இருந்து, சென்னைக்கு வருவதற்கு விமான டிக்கெட் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை- சென்னை, சாதாரண நாட்கள் கட்டணம் ரூ. 4,542. இன்றைய தினம் கட்டணம் ரூ. 18,127 தூத்துக்குடி-சென்னை, சாதாரண நாட்கள் கட்டணம் ரூ. 4,214. இன்றைய தினம் கட்டணம் ரூ. 17,401 திருச்சி- சென்னை, சாதாரண நாட்கள் கட்டணம் ரூ. 2,334. இன்றைய தினம் கட்டணம் ரூ. 9,164 கோவை-சென்னை, சாதாரண நாட்கள் கட்டணம் ரூ. 3,550. இன்றைய தினம் கட்டணம் ரூ. 6,475 இவ்வாறு பயணிகள், பல மடங்கு கட்டணங்களை கொடுத்து, சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி