சென்னை: பெண் காவலரை ஏமாற்றிய.. காதலன் கைது

31பார்த்தது
சென்னை: பெண் காவலரை ஏமாற்றிய.. காதலன் கைது
சென்னை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பெண் காவலர் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில், அவருக்கு செல்போன் மூலம்  சிங்காரவேலன் என்பவர் பழக்கமாகியுள்ளார். இவர் பெண் காவலரை திருமணம் செய்துகொள்வதாக கூறி ரூ.3.50 லட்சம் பெற்றுள்ளார். மேலும் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் போலீசார் சிங்காரவேலைனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.