பெரியார் குறித்து அவமரியாதையாக பேசுவதை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், சீமானை பற்றி பேச விரும்பவில்லை என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்து முடிந்த 76 ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னையில் பெரியார் சிலை அவமதிப்பு குறித்தான கேள்விக்கு "சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது" என தெரிவித்தார். பெரியார் குறித்து சீமான் பேசியது குறித்த கேள்விக்கு, "சீமானை பற்றி நான் பேச விரும்பவில்லை" என தெரிவித்தார்.