இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ என்ற இலங்கை பெண் கடந்த 2019ம் ஆண்டு சுற்றுலாப்பயணிகள் விசாவில் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னர் சென்னை சாலிகிராமம் சாரதாம்பாள் தெருவில் வசித்து வந்த இவர், சட்டவிரோதமாக ஆதார்கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை பெற்றுள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல் தற்போது அமலாக்கத்துறைக்கு தெரியவந்துள்ளது. இவர் எப்படி ஆவணங்களை பெற்றார் என்று கேள்வி எழும்பியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.