சென்னை: கூடுதல் கட்டணம் கேட்ட ரேபிடோ டிரைவர் மீது புகார்

74பார்த்தது
சென்னை: கூடுதல் கட்டணம் கேட்ட ரேபிடோ டிரைவர் மீது புகார்
சென்னையில் 21 கி. மீ. , தொலைவு பயணத்திற்கு ரூ. 1, 000 கேட்டதாக ரேபிடோ டிரைவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ஆன்லைன் ஆப்பில் ரூ. 350 கட்டணமாக காண்பித்த நிலையில், ரூ. 50 உயர்த்தி ரூ. 400 தருவதாக சொன்னதால், டிரைவரும் சம்மதித்து எங்களை பிக்அப் செய்து கொண்டார். ஆனால், அதன்பிறகு சென்னையில் தண்ணீர் அதிகம் தேங்கியிருக்கும் என்பதால், ரூ.1000 தருமாறு டிரைவர் கேட்டு வாக்குவாதம் செய்தார். ஒரு வழியாக ரூ. 800 தருவதாக ஒப்புக் கொண்டோம்.

ஓட்டுநர்கள் கூடுதல் தொகை கேட்கின்றாரா? என்று ஆப்பில் புகார் அளிக்கும் வசதி இருந்தும், அதனை பயன்படுத்தி, புகார் அளித்தாலும் எந்த பதிலும் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி