பெரம்பலுார்: பைக் மோதி சிகிச்சை பெற்றவர் பலி; போலீசார் விசாரணை

279பார்த்தது
பெரம்பலுார்: பைக் மோதி சிகிச்சை பெற்றவர் பலி; போலீசார் விசாரணை
பெரம்பலுார் அடுத்த வயலுாரைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் பழனி முத்து (61), கடந்த 4ம் தேதி பணி முடிந்து விடுதிக்குச் செல்லும்போது, மவுன்ட் - பூந்தமல்லி சாலையில் வேகமாக வந்த ஹோண்டா ஆக்டிவா மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி