செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார்.
சென்னையில் 7 இடங்களில் நகை பறிப்பு சம்பவம் நடந்தது. கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் (26) என்பவரை அழைத்துச் சென்ற போது போலீசை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். தரமணி ரயில் நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.