சென்னை குரோம்பேட்டையில் ரூ. 53,000 மதிப்புள்ள ஐபோன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு குழந்தைகளுக்கான பாடிவாஷ் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தும், பொருளை திருப்பி அனுப்பிய பின்னரும் பணம் திரும்ப வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அமேசான் டெலிவரி சேவையில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.