வேளச்சேரி: 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு.. விசாரணை

55பார்த்தது
வேளச்சேரி: 3 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு.. விசாரணை
சென்னை கோவிலம்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு பைக்கில் தப்பிய வாலிபர்களை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். கோவிலம்பாக்கம், சத்யா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (25). நேற்று முன்தினம் இரவு 8. 45 மணி அளவில் அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது குண்டு வீசியவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் கோவிலம்பாக்கம், சத்யா நகர் 9வது தெருவில் வசித்து வரும் மணிகண்டன் (26), சின்ன கோவிலம்பாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வரும் குகன் (24) ஆகிய இருவர் வீட்டு வாசலிலும் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். பெட்ரோல் குண்டு வீசியபோது 3 வீடுகளிலுமே அனைவரும் வீட்டினுள் இருந்ததால் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்தபகுதியில் அடுத்தடுத்து 3 பேரின் வீடுகளை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட 3 பேரும் மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி