சென்னை அண்ணாநகரில் உள்ள மரிய ஜான்(60) என்பவரது வீட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக திருமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட குமார்(60) உள்ளிட்ட பத்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.