மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அம்பத்துார், பழனியப்பா நகர், புதுார், ஏ. கே. அம்மன் நகர், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.