மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாலிபர்கள் தங்கியுள்ள வீடுகளை நோட்டமிட்டு, மின் சாதனப் பொருட்கள் திருடப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் (27) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், வாலிபர்கள் தங்கியுள்ள வீடுகளை நோட்டமிட்டு, அவர்களது மொபைல் போன், மடிக்கணினிகளை திருடியது தெரியவந்தது.