சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணிகளால் மூன்று முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதிகை விரைவு ரயில் மார்ச் 2 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். நெல்லை விரைவு ரயில் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 15ம் தேதி வரை காலை 8 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு புறப்படும்.