சென்னை: மீண்டும் எகிறி அடிக்கும் தங்கம் விலை

72பார்த்தது
சென்னை: மீண்டும் எகிறி அடிக்கும் தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 65,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வாரதுவக்க நாளான (திங்கட்கிழமை) மார்ச் 24ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. 

நேற்று (மார்ச் 25) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 65,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 சரிந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி