சென்னை: செல்போனுக்காக கழுத்தை நெரித்து கொலை

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஸ்மத் பாட்ஷா (38) என்பவர், மின்சார ரயிலில் மதுபோதையில் பயணம் செய்தபோது, சக பயணிகளான சுரேஷ் (38) சீனிவாசன் (52) ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில், சுரேஷ், சீனிவாசன் சேர்ந்து அஸ்மத் பாட்ஷாவை தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர். எழும்பூர் ரயில்வே போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வந்த நிலையில், கொலையாளி சுரேஷ் கைது செய்யப்பட்டார். சீனிவாசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
