பெருங்குடியில் உள்ள 225 ஏக்கர் குப்பை கிடங்கில், தூய்மை
இந்தியா 1.0 திட்டத்தின் கீழ் ரூ. 350.065 கோடி மதிப்பில், 29.28 லட்சம் கனமீட்டர் மரபுவழி கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு நிலம் மீட்டெடுக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 6 சிப்பங்களில், 3, 4, 5 ஆகிய சிப்பங்களில் பணிகள் நிறைவடைந்து 94 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆணையர் சமீரன் நேற்று நிறைவு செய்யப்பட்ட திட்டத்தை ஆய்வு செய்தார்.