ஆவடி அடுத்த கரிமேடு பகுதியில் வசிக்கும் பேரணா-கவுரி தம்பதியின் வீட்டில் இன்று (பிப்ரவரி 14) காலை சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இருவரும் வேலைக்கு சென்றிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், வீட்டில் இருந்த பொருட்கள், பைக் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.