கோட்டூர்புரம், சித்ரா நகர் வாம்பே குடியிருப்பில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கக்கோரி நேற்று காலை காந்தி மண்டபம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ. தி. மு. க. கவுன்சிலர் கதிர்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால், கோட்டூர்புரம் சிவசக்தி விநாயகர் கோவிலில் இருந்து 4 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.