செப்டம்பர் 2013ல் அண்ணாமலைபுரத்தில் நரம்பியல் மருத்துவர் டாக்டர் சுப்பையா கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னுசாமி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அய்யப்பன் அப்ரூவரானார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் என மொத்தம் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.