சென்னை அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணிபுரிந்த 30 வயதான பெண் காவலர் கார்த்திகா ராணி, டி. பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை 4 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் பிரிந்து சென்ற நிலையில், பிள்ளைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தனியாக வசித்து வந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டி. பி. சத்திரம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினை மட்டுமா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என ஆராயும் போலீசார், கார்த்திகா ராணியின் செல்போனை ஆய்வு செய்து, அவர் அதிகம் பேசிய நபர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.