சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ஷீலா என்பவர், அதிமுக முன்னாள் கவுன்சிலர் தேவதாஸ் மீது வீடு வாங்கித் தருவதாகக் கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் அளித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும், மதுரவாயல் காவல் நிலையத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.