பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 8ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம் மூலம் பொது விநியோகத் திட்டங்கள் தொடர்பான மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு, தீர்வுகள் வழங்கப்படும்.