பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் உடைமைகளில் இருந்து ஆறு பிஸ்கட் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை பிரித்துப் பார்த்தபோது, ஒரு கிலோ உயர்ரக கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வெளியே பார்சலை வாங்க காத்திருந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.