வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 37 வயதான வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் தீபிகா ஹரிஸ், நேற்று காலை துணிகளை எடுக்க மாடிக்கு சென்றபோது தவறி விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.