கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், இளைஞர்கள் இருவருடன் சென்ற சிறுமிகள் இருவர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி செய்யப்பட்டது. சம்பவத்தன்று யான்சி என்ற சிறுமி உயிரிழந்தார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பவுசி என்ற சிறுமியும் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.