பேருந்தில் நகை, பணம் திருடியவர் கைது

3பார்த்தது
பேருந்தில் நகை, பணம் திருடியவர் கைது
ஸ்ரீபெரும்புதூர் நர்மதா (31) தனது கணவருடன் இடியாப்பம் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 9ம் தேதி சிவகங்கை சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு தனியார் பேருந்தில் சென்னை திரும்பும்போது, அவரது கைப்பை திறந்திருந்ததும், அதில் இருந்த 14,000 ரூபாய் மற்றும் 8,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளி கைச்சங்கிலி மாயமானதும் தெரியவந்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்காரம் என்பவர், உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.