சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம் வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது. திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் துணை கட்டிடத்திற்கு அருகில் தற்போதுள்ள பி. 2பி.2 வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் வாகன நிறுத்தும் இடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதலாக 400 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். தற்போது, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி. 2பி.2 வாகனம் நிறுத்துமிடம் 1, 0001,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்கி, மெட்ரோ சேவையை மேலும் எளிமையாகவும் திறம்படவும் பயன்படுத்த ஊக்குவிக்கும். மேம்படுத்தப்பட்ட இந்த வாகன நிறுத்துமிடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) பி. கோபிநாத் மல்லியா திறந்து வைத்தார்.