சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகப்பேர் 2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம். ஜி. ஆர். சாலை பின்புறம் உள்ள சி19, சி18, சி15, சி16 பகுதிகள் மற்றும் அம்பத்துார் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தேவைக்கான பணிகளை முடித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.