புழல் சிறை கைதி உயிரிழப்பு: போலீசார் விசாரணை

8பார்த்தது
புழல் சிறை கைதி உயிரிழப்பு: போலீசார் விசாரணை
சென்னையை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த பாலாஜி (54), மயிலாப்பூர் போலீசாரால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி