சென்னையில் பாங்காக்கிலிருந்து வந்த விமானத்தில், மின்சார சாதனங்களுக்குள் 31 அரிய வகை விலங்குகளைக் கடத்தி வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து பாம்பு, ஆமை, ஓணான் உள்ளிட்ட விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அரிய வகை விலங்குகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.