சென்னை ராமாபுரம் பால் வெல்ஸ் சாலையில் தொடர் கனமழை மற்றும் மெட்ரோ பணிகளால் சாலை சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து காவல் துறையினர் மெட்ரோ நிர்வாகத்தினரின் உதவியுடன் சாலையை சரிசெய்து, போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.