சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் “தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025” நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானப் பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வாகனங்கள் தார்பாலினால் மூடப்படாமல் இருத்தல், பொருட்கள் சாலையில் சிதறுதல், அளவுக்கு அதிகமாக ஏற்றுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னரே வாகனங்கள் விடுவிக்கப்படும்.