கழிவுநீர் உந்து நிலையம் 2 நாட்கள் செயல்படாது

0பார்த்தது
கழிவுநீர் உந்து நிலையம் 2 நாட்கள் செயல்படாது
சென்னை: அம்பத்தூர் மண்டலம், கொரட்டூர் கழிவுநீர் உந்து நிலையத்தில் புதிய மின் மோட்டார் இறைப்பான் அமைக்கும் பணி காரணமாக, வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 10ம் தேதி இரவு 10 மணி வரை (36 மணி நேரம்) இந்த உந்து நிலையம் மற்றும் அதைச் சார்ந்த பிற கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது. கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பகுதி அலுவலர்களை 8144930907, 8144930218, 8144930219, 8144930257 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி