சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ. 3. 22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடத்தை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திமுக எம்பி தயாநிதிமாறன், மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.