சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு இ.சி.ஆர்., உத்தண்டி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணியின்போது, கான்கிரீட் கலவை ஏற்றி வந்த ரெடி மிக்ஸ் லாரி நேற்று முன்தினம் இரவு பள்ளத்தில் கவிழ்ந்தது. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்தால் உத்தண்டியில் சுமார் 3 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.