பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: வாலிபர் கைது

0பார்த்தது
பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: வாலிபர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக்(26) என்பவர், ராமாபுரம் ஈ. வி. பி. சந்தோஷ் நகரில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 21ம் தேதி வேலைக்குச் சென்றபோது, வீட்டைப் பூட்டி சாவியை ஷு அலமாரியில் வைத்திருந்தார். இரவு வீடு திரும்பியபோது, பையில் வைத்திருந்த 2 தங்கச் செயின்கள், 2 தங்க நாணயங்கள் என மொத்தம் 3 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த ராமாபுரம் போலீசார், மாம்பலம் எம். ஜி. ஆர். நகரைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி