அம்பத்தூரில் இளைஞர் கழுத்து அறுத்து கொலை?: போலீசார் விசாரணை

0பார்த்தது
அம்பத்தூரில் இளைஞர் கழுத்து அறுத்து கொலை?: போலீசார் விசாரணை
அம்பத்துார், கல்யாணபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (ஆட்டோ ஓட்டுநர்) கஞ்சா போதைக்கு அடிமையாகி, பெற்றோருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் படுக்கையறையில் ஸ்ரீதர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த அம்பத்துார் போலீசார், ஸ்ரீதரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், ஸ்ரீதருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தினசரி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீதரின் தந்தை மன்மதன் மற்றும் தாய் கல்யாணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி