
மசாஜ் சென்டரில் கத்திமுனையில் வழிப்பறி: போலீசார் விசாரணை
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் நேற்று மாலை மதுபோதையில் சென்ற நான்கு பேர் மசாஜ் செய்ய மறுத்ததால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கத்தியைக் காட்டி மிரட்டி பணம், செல்போன், நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















