காரின் இருக்கையில் சடலம்: போலீசார் விசாரணை

0பார்த்தது
காரின் இருக்கையில் சடலம்: போலீசார் விசாரணை
பெருங்குடி பகுதியைச் சேர்ந்த 57 வயதான மாதவன், அரும்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். ஜூன் 1ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், துரைப்பாக்கம் 200 அடி சாலையோரம் ஒரு காரின் பின் இருக்கையில் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அது காணாமல் போன மாதவனின் சடலம் என தெரியவந்தது. காணாமல் போனவர் காரில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி