சென்னை: விருகம்பாக்கம் அருகே போதை ஊசி பயன்படுத்தி உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் நண்பர்களோடு அருகில் உள்ள காபி ஷாப்பிற்குச் சென்றுள்ளார்.
அங்கு போதை ஊசி பயன்படுத்தியதால் மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் ஆன்லைனில் போதை ஊசி வாங்கி பயன்படுத்தியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.