ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் 2013 ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறி நற்பெயருக்கு களங்கம் என கூறி, தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சிடி-யை எழுத்து வடிவமாக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. மொழிபெயர்ப்பு மற்றும் தட்டச்சுக்கு ஆகும் செலவினமாக 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு செலுத்தவும், மார்ச் 3வது வாரத்துக்குள் மொழிபெயர்ப்பு பணிகளை முடிக்கவும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டார். விசாரணையை மார்ச் 12ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.